கட்டைக்கூத்து டிப்ளமோ படிப்பு
பதிவு 2025-2026
குரு பொ. ராஜகோபால் மற்றும் அனுபவம் வாய்ந்தஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடிப்பு, பாடல்,இயக்கம் மற்றும் கட்டைக்கூத்தின் திறமை ஆகியவற்றில் நேரடிப் பயிற்சியை 10 மாத காலம் வழங்க இருக்கிறது .
18 வயதுக்கு மேற்பட்ட 20 பங்கேற்பாளர்களை எதிர்பார்க்கிறோம் . நிகழ்த்து கலைகளில் முன் அனுபவம் வரவேற்கத்தக்கது ஆனால் கட்டாயமல்ல. காஞ்சிபுரத்திற்கு வெளியே 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புஞ்சரசந்தாங்கலில் உள்ள கட்டைக்கூத்து சங்கத்தில் இந்தப் பயிற்சி நடைபெறும்.
பாட, பேச ,நடிக்க மற்றும் இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்வீர்கள்.இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும் .இந்த அடிப்படை பயிற்சி உங்களை ஒரு குழுவில் கூத்து கலைஞராக ,சமகால நாடகக்கலைஞராக , திரைப்பட நடிகராக அல்லது இயக்குநராகவும் தொடர ஊக்கம் அளிக்கும்.
சங்கம் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு .இப்பயிற்சியின் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை உறுதி செய்ய மாதத்திற்கு ₹ 7,500 வீதம் 10 மாதத்திற்கு பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டும் . பொருளாதார உதவி நாடும் மாணவர்களுக்கு ,சங்கம் நிதி உதவி பெற முயற்சி செய்து வருகிறது.
படிவத்தை நிரப்பவும். பதிவு பரிசீலனை பிறகு நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்